யாழின் பிரதான பகுதியில் பெரும் பரபரப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, April 23, 2019

யாழின் பிரதான பகுதியில் பெரும் பரபரப்பு!

நெல்லியடிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படை, இராணுவம், பொலிஸார் இணைந்து குறிப்பிட்ட பகுதி ஒன்றைச் சுற்றிவளைத்துள்ளனர்.

படைத்தரப்பினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றே சுற்றிவளைக்கபட்டுள்ளது என்று தெரியவருகிறது.

அங்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விவரங்களைக் கூறுவதற்கு பொலிஸார் மறுத்துவருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

நெல்லியடி மாலு சந்திப் பகுதியில் வெடிபொருள் உள்ளதென இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தேடுதல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.