ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 9, 2019

ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் உறுதியானால் அப்போது எமது வேட்பாளர் யாரென தீர்மானிப்போம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.