200-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியவர்களை அல்லா ஏற்றுக் கொள் என்று பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை கொண்டாடியுள்ளனர் என்று பயங்கரவாத நிபுணர் நீட்ட அவரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
நியூசிலாந்தின் மசூதியில் நடந்த தாக்குதல் மற்றும் சிரியாவில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்கும் தாக்குதல் என்று ஐ.எஸ் பெருமை அடித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இப்படி கூறப்படுவதால், இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று கொள்வதை தெளிவாக காட்டுவதாக SITE உளவுத்துறை குழுவின் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இது நியூசிலாந்து தாக்குதலுக்கு பழிவாங்குதல் என்று கூறும், போது திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது போல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்