தமிழர் பகுதியில் கதறி.. கதறி.. உயிர் விட்ட கர்ப்பணித் தாய்! கண்டு கொள்ளாத வைத்தியர்.. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 13, 2019

தமிழர் பகுதியில் கதறி.. கதறி.. உயிர் விட்ட கர்ப்பணித் தாய்! கண்டு கொள்ளாத வைத்தியர்..

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் மகப்பேற்று கிளினிக்கில் அவரிடம் தொடர்ந்து மனைவியை பரிசோதித்ததிற்கமைய இம்மாதம் 7ம் திகதி பிள்ளைப்பேறு காலம் அண்மித்த திகதிக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் 10ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது மனைவி தொடர்ந்து வலியினால் அவதியுற்றுள்ளார் இருநாட்களாக உச்ச கட்ட வேதனையால் பாதிப்புற்று குழந்தை பிறக்காமை உள்ள சூழ்நிலை நிலவியதையும் பிள்ளைப்பேறு காலம் தாண்டியும் இன்னும் பிள்ளை பிறக்கவில்லை எனின் அடுத்த கட்டம் ஆயுத பிரசவம் அதுதான் சிசேரியன் அதை கணவன் மனைவி இருவர் சம்மதம் கொடுத்தும் செய்யாமல் இழுத்துடித்துள்ளதாக கணவர் கூறுகின்றார்..


இதனால் நேற்று அதிகாலை தாய் சேய் மரணமடைந்துள்ளார்கள் என கணவனின் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்துள்ளது.

இதே வேளை இவ்விடத்தில் நாம் ஒன்றை உணரவேண்டும் ஒரு வசதியான குடும்பமாக அரச ஊழியராகயிருந்தால் உடனடியாக இதே மகப்பேற்று நிபுணரும் அவர் மனைவியும் அதிக நேரமாக வேலை புரியும் அவர்கள், தனியார் வைத்தியசாலை ,பைனியர் தனியார் வைத்தியசாலை கொண்டு சென்றிருந்தால் உடனடியாக பணம் என்றால் வாயை திறந்து சடுதியாக சிசர் செய்து இக்குடும்பத்துடன் இன்முகத்துடன் சிரித்து நீண்ட நேரம் செலவிட்டு பழகி தாயையும் குழந்தையும் காப்பாற்றிருப்பார்கள்.



இப்படியான நடந்த திடீர் துக்கத்தால் கணவன் மனைவி மற்றும் குழந்தையை நினைத்து கதறி அழுது துடிக்கும் சம்பவம் பார்ப்பவரை சங்கடத்தில் ஆழ்த்துகிறது