மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்? அதிரப்போகும் கொழும்பு அரசியல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 14, 2019

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்? அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டத்தில் ஜனாதிபதி உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இதொகாவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்ரோபரில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்ட போது, ஐதேக உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்ததாக கூறப்படுகின்றது.

அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய மட்டத்திலான தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமிக்கக்கூடும் எனவும், அதேபோல் ஐ.தே.க. மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த அணியுடன் கைகோர்க்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்களின்போது இதற்கான அடித்தளத்தை அரசியல் பிரமுகர்கள் இடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.