இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
தற்போது இலங்கை மக்களால் அதிக உச்சரிக்கப்படும் பெயர் தேசிய தவ்ஹீத் ஜமாத்.
யார் அவர்கள்?
என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குறித்து குறைவான தகவல்களே தெரியவருகிறது என பிபிசி மேற்கொண்ட மானிடரிங்கில் தெரியவந்துள்ளது.
என்டிஜே பேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பகிரப்பட்டுள்ளன. அவர்கள் இலங்கையின் வட பகுதி மக்களை குறி வைத்து இயங்குவதாகவே தெரிகிறது. அதாவது ரத்த தானம் செய்வது, ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் விநியோகிப்பதென அவர்கள் இயங்குகிறார்கள்.
ஆனால், அதே நேரம் முகமது ஜக்ரானின் காணொளியும் அதில் உள்ளது.
ஆனால், அந்த அமைப்பின் ட்விட்டர் கணக்கு மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் எந்த பதிவும் இல்லை.
இலங்கை அதிகாரிகள் என்டிஜே குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.a