கொழும்பு - கண்டி பிரதான வீதியின் தோலம்கமுவ பிரதேசத்தில் வீதி ஓரத்தில் இடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை காவற்துறையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து, துப்பாக்கிகள் சிலவும், கைக்குண்டொன்று உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என காவறதுறையினர் தெரிவித்துள்ளனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை, நீர்க்கொழும்பு - பெரியமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், ட்ரோன் ரக கமராக்கள் 15 மீட்கப்பட்டுள்ளன.
விமானப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் அவை மீட்கப்பட்டதாக விமானப்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டதுடன், எதற்காக அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பன குறித்து கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில், 3 பெண்கள் உள்ளடங்களாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தலாத்துஒய பிரதேசத்தில் பரந்த ட்ரோன் ரக கமரா ஒன்று காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
எனினும் அதனை இயக்கியவர் தொடர்பில் கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.