முல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, April 18, 2019

முல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லைத்தீவு – முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகம் காரணமாக குறித்த பேருந்து பாதையைவிட்டு விலகி  ஏ9 வீதியில் அமைந்துள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது.

மிக மோசமானமுறையில் குறித்த பேருந்து செலுத்தப்பட்டிருந்த போதிலும் இந்த விபத்தின்போது ஒருவர் மாத்திரமே சிறுகாயத்துக்குள்ளாகியுள்ளார். அத்தோடு அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.