விலகி சென்றாள்..... வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன்: காதலன் வாக்குமூலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 17, 2019

விலகி சென்றாள்..... வெளிநாட்டில் இருந்து வந்து அவளை தீ வைத்து கொளுத்தினேன்: காதலன் வாக்குமூலம்

கொச்சியில் கடந்த மாதம் 14-ம் தேதி இளம்பெண் ஒருவருர் மர்மநபரால் தீவைத்து கொளுத்திய நிலையில் ஒருமாதம் கழித்து இந்த சம்பவம் தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரீட்டா என்ற மாணவி கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு கடையிலும் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14 ஆம் திகதி தனது தோழியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவரால் வழிமறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்பட்டார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் ரீட்டா மற்றும் அவரது தோழியும் உயிர் தப்பியுள்ளனர். இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பெட்ரோல் கொண்டுவந்த காலி பாட்டில் மட்டும் தான் பொலிசிற்கு ஆதாரமாக கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒரு மாதம் கழித்து குற்றவாளி மானு கைது செய்யப்பட்ட நிலையில் நடந்த சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள விளக்கத்தில், மானும், ரீட்டாவும் ஒன்றாக படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

சமீபகாலமாக, ரீட்டா மானுவுடன் பழகுவதைத் தவிர்த்துவந்துள்ளார். இதனால் அவள் வேறு யாரையும் காதலிக்கிறாளா என மானு சந்தேகம் அடைந்துள்ளார்.

இருப்பினும், தனது காதலியை சமாதானப்படுத்த துபாயில் இருந்து கடந்த ஜனவரி மாதம் கொச்சி வந்துள்ளார் மானு.

தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு ரீட்டா சம்மதிக்காததால், அவர் மீதான கோபம் அதிகரித்துள்ளது. மீண்டும் துபாய் சென்றவர், கோபம் அதிகரித்த காரணத்தால் ரீட்டாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனால், மீண்டும் துபாயில் இருந்து கொச்சி வந்த தனது காதலியை கொலை செய்யப்போவது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பெங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூர் வந்துள்ளார். பின்னர், கோயம்புத்தூரில் இருந்து டூவீலரை எடுத்துக்கொண்டு கொச்சிக்கு விரைந்துள்ளார்.

அங்குவைத்துதான் ரீட்டாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். கொச்சி நகரத்தில் மட்டும் அதிகமான கமெராக்களை ஆய்வு செய்ததில்தான் மானுவின் பைக் உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது.

அடையாளம் கண்டுகொண்ட பின்னர், மானு அபுதாபியில் இருப்பது தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்டு விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், துபாய் அதிகாரிகள் உதவியுடன் அவரை மீட்டு கேரளா கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்ய முயன்றேன் என மானு பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.