ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டு தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவனான மாகந்துரே மதூஷின் சொத்து விபரங்கள் தொடர்பில் சி.ஐ.டி. ஊடாக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மனைக்கப்ப்ட்டுள்ளது.
அதன்படி மாகந்துரே மதூஷுக்கு சொந்தமான வங்கிக்கணக்குகள் தொடர்பில் ஆராயா நடவடிக்கைகள் எடுக்கப்ப்ட்டுள்ளதுடன் இதற்கான ஆலோசனைகளை மாகந்துரே மதூஷ் மற்றும் டுபாயில் கைதான அவரது சகாக்கள் தொடர்பில் விசாரணைகளை ஒழுங்கமைக்க நியமிக்கப்ப்ட்ட சிறப்பு பொலிஸ் குழு வழங்கியுள்ளது.
இன்று காலை இந்த சிறப்பு பொலிஸ் குழு பொலிஸ் தலைமையகத்தில் அதன் தலைவர் சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் கூடியது. இதன்போதே இத் தீர்மானம் எடுக்கப்ப்ட்டு ஆலோசனை வழங்கப்ப்ட்டுள்ளது.
இதேவேளை, தற்போது டுபாயில் இருந்து நாடு கடத்தப்ப்ட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி., சி.சி.டி., பொலிஸ் விஷேட அதிரடிப் படையி மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவினரால் முன்னெடுக்கப்ப்ட்டுவரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அறிக்கை கோர முடிவெடுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.