புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடுமை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 14, 2019

புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடுமை

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.