தமிழக மீனவர்கள் 15 பேர் சிறீலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
நேற்று பருத்தித்துறைக்கு வடமேல் திசையில் இவர்கள் கைதாகியுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மீது காங்கேசன்துறைகடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் அவர்கள் யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவரென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.