இளைஞர்கள் சமூகத்திற்கு சேவை புரியும் மனப்பாண்மை கொண்டவர்களாக மாற வேண்டும் – நாமும் இணைவோம் அமைப்பின் இணைப்பாளர் (செவ்வி இணைப்பு) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

இளைஞர்கள் சமூகத்திற்கு சேவை புரியும் மனப்பாண்மை கொண்டவர்களாக மாற வேண்டும் – நாமும் இணைவோம் அமைப்பின் இணைப்பாளர் (செவ்வி இணைப்பு)

இளையோர் இணைவில் புதுயுகம் பிறக்கும், இளையோர் சக்தி ஒரு சமூகத்தின் முதுகெலும்பு” இன்றைய பூகோளமயமாதல் சூழலில் இளையோரின் மனதைக் கெடுத்து அவர்களின் ஆற்றலை தீய வழியில் திசைதிருப்பி விட ஆயிரம் கவனக் கலைப்பான்கள் உள்ளன. அத்தகைய தீய வழிகளின் பக்கம் சென்று விடாமல் மானுடத்தின் உயர்வு பற்றிச் சிந்தித்து தாம் வாழும் சமூகத்திற்குச் சேவை புரியும் மனப்பான்மை கொண்ட இளையோரும் உள்ளனர் என்பது ஆறுதல் தரும் விடயம். அத்தகைய இளையோரின் மனதில் தோன்றியதே நாமும் இணைவோம் எனும் பெயரிலான தொண்டு நிறுவனம். சுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் சொற்ப காலத்திற்குள்ளேயே தனது சக்திக்கும் அதிகமான பணியைத் தாயகத்திலே ஆற்றி, தம்மாலும் முடியும் என்பதை நிரூபித்து நிற்கிறது.
தம்மைப் போன்ற பதின்ம வயதுகளில் வாழும் தாயகச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கும் இந்த நிறுவனத்தின், தோற்றம், வளர்ச்சி, எதிர்காலத் திட்டம் என்பவை பற்றி விளக்குகிறார் இந்த அமைப்பின் ஸ்தாபக அங்கத்தவரும், இணைப்பாளருமான ஜோர்ஜ் கிங் துபின்சன்.
இந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு இந்த அமைப்பில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் அவர்களது முகப்புத்தகப் பக்கத்தில் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது