சுவிசின் அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒரே மேடையில் ஏற்றுவதே எனது இலட்சியம் மனம் திறக்கிறார் கலைஞர் சதா (பிரத்தியேக நேர்காணல்) - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 23, 2019

சுவிசின் அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒரே மேடையில் ஏற்றுவதே எனது இலட்சியம் மனம் திறக்கிறார் கலைஞர் சதா (பிரத்தியேக நேர்காணல்)

உழைத்துக் களைத்த மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாகிய கலைகள் இன்று உலகளாவிய ரீதியில் நிறுவனப் பட்டவையாக வளர்ந்து நிற்கின்றன. பழைய கலை வடிவங்கள் ஒருசில அருகிப் போய் வரும் அதேவேளை வளர்ந்துவரும் தொழில்நுட்பம் காரணமாக புதிய கலை வடிவங்கள் உருவாகியும் உள்ளன. மறுபுறம் பாரம்பரிய கலை வடிவங்களோ புதிய மெருகோடு பல உயரங்களைத் தொட்டு நிற்கின்றன.
புலம்பெயர் தமிழ் மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத நவீன கலைவடிவமாக விளங்குவது கரோக்கே இசை. திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் என அனைத்து வகையான நிகழ்வுகளிலும் இனிமை சேர்க்கும் ஒரு அம்சமாக விளங்கி வருகிறது இது.
சுவிஸ் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கரோக்கே இசைக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இவற்றுள் முதன்மையான குழுக்களுள் ஒன்றே சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழு. கேள்விஞானத்தோடு ஆரம்பிக்கப்பட்டாலும் கூட 10 வருடங்களைத் தாண்டியும் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கும் குழு. அதன் 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி அக் குழுவின் இயக்குநர் சதா, அதன் முகாமையாளர் பிரேம்குமார் மற்றும் பாடகி நிதி ஆகியோர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய நேர்காணல்.