மன்னார் புதைகுழி கார்பன் ஆய்வு அறிக்கையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, March 31, 2019

மன்னார் புதைகுழி கார்பன் ஆய்வு அறிக்கையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வு அறிக்கை இந்த எலும்புக்கூடுகள், 1499 ஆம் ஆண்டுக்கும் 1719 ஆண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்திய தடயவியல் நிபுணர் ஒருவர் இந்த புதைகுழி அரை நூற்றாண்டுக்கு உட்பட்டது என்று கூறியிருக்கிறார்.

அவர் புதைகுழி மண்ணைப் பரிசோதித்த பின்னரே .இதனைக் கூறியுள்ளார்.

எனவே, கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.