நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு கேட்க செய்ய வேட்டபாளர் தம்பிதுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டதால், விரும்பம் இருந்தால் ஓட்டு போடுங்க இல்லேண போங்க அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாததில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பிரச்சாரத்திற்கு சென்ற கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் எம்.பி-யுமான தம்பிதுரையை மக்கள் முற்றுகையிட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஓட்டு போட்டால் போடுங்க இல்லேணா போங்க, உங்க காலில் எல்லாம் விழ முடியாது என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதி மக்கள் வாயடைத்து நின்றனர்.
அது மட்டுமில்லை, தொகுதியில் 8,000 கிராமங்களுக்கு இதுவரை போயிருக்கேன். இதுக்கு முன்னாடியும்தான் எத்தனையோ பேர் எம்.பியா இருந்திருக்காங்க. அவங்க எல்லாம் என்ன செய்தார்கள்?" என்று கேட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.