சுவிட்சர்லாந்தில் இனி குடியிருக்க தங்களால் முடியாது என சுவிஸ் பெண்மணியால் கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பாஸல் பகுதியில் கடந்த வாரம் 75 வயது பெண்மணியால் கொல்லப்பட்ட 7 வயது சிறுவனின் உடலை அவரது சொந்த நாடான கொசோவோவில் உறவினர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தை உலுக்கிய இச்சம்பவத்தில், பலர் அந்த தாயாரை தொடர்புகொண்டு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து, சுவிஸில் இரங்கல் கூட்டம் ஒன்றை முன்னெடுக்க கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஞாயிறு அன்று Gotthelf பாடசாலை வளாகத்தில் குறித்த இரங்கல் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து தங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பலர் தொடர்புகொண்டு வருவதாகவும்,
அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும்பொருட்டு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதாகவும், கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று சுவிஸ் வருவதாக கூறும் அவர், ஆனால் தமது மகனை பறிக்கொடுத்த நாட்டில் இனி குடியிருப்பது தங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது எனவும் அவர் தெர்வித்துள்ளார்.