புற்றுநோயை இலகுவாக கண்டறியும் சாதனத்தை கண்டுபிடித்து அசத்திய மாணவர்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

புற்றுநோயை இலகுவாக கண்டறியும் சாதனத்தை கண்டுபிடித்து அசத்திய மாணவர்கள்


மனித குலத்திற்கு சிம்ப சொற்பனமாக இருக்கும் நோய்களுள் புற்றுநோயும் ஒன்றாகும்.

இந்நோய்த் தாக்கத்தினை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும்.

அதாவது ஆரம்ப நிலைகளில் இலகுவாக கண்டறிய முடியாது இருப்பதுடன் மிகவும் வலுவடைந்த பின்னரே ஓரளவிற்கு கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் தோலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோயைக் கண்டுபிடிக்கக்கூடிய சாதனத்தினை கனடிய மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

sKan எனும் இச் சாதனத்தை உடலின் மேற்பகுதியில் பகுதியில் வைத்து பயன்படுத்த முடியும்.

இதன் முடிவினை கணினியின் உதவியுடன் அறிந்துகொள்ள முடியும்.

இதன் விலையானது ஏறத்தாழ 1,000 டொலர்கள் ஆகும்.

பட்டப்படிப்பினை மேற்கொண்டு வரும் நான்கு மாணவர்கள் இணைந்தே இச் சாதனத்தினை உருவாக்கியுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு பிரித்தானியாவின் நன்கறிந்த கண்டுபிடிப்பாளர் விருதும், 40,000 டொலர்கள் பணப்பரிசிலும் வழங்கப்பட்டுள்ளது.