ரோஸ் 128பி என்ற ஏலியன்கள் வாழும் கிரகத்தை சிலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிலி நாட்டில் உள்ள ஐரோப்பிய தெற்கு விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சொந்தமான லா சில்லா என்ற என்ற இணையதளம் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை ஹார்ப்ஸ் என்ற கருவியின் உதவியுடன் சூரியக் குடும்பத்திற்கு வெகு தொலைவில் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
இந்த கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு ரோஸ் 128பி (Ross 128b) என்று பெயரிட்டுள்ளனர்.
Astronomy & Astrophysics (வானவியல் மற்றும் வானியற்பியல்) என்ற பத்திரிகையில் இது குறித்த கூடுதல் விரவங்கள் அடங்கிய கட்டுரை வெளியாக உள்ளது.