முள்ளிவாய்கால் முடிவல்ல .. - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 21, 2019

முள்ளிவாய்கால் முடிவல்ல ..

தமிழர் வரலாற்றில் முள்ளிவாய்கால் முக்கிய பதிவுகளை மிகவும் ஆளமான பதிவுகளை உலகிற்கு வெளிப்படுத்திவிட்டு கடந்த 6 வருடங்களாக அதற்கான விடைகாணமல் எதுவித விமோசனமும் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ..
நாம் எமது தரப்பில் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை நாம் சரிவர செய்து முடித்துவிட்டோமா ..இக்கேள்விக்கான விடை காண நாம் 1983ம் ஆண்டு யூலை மாதத்திற்கு பின்னோக்கி பார்க்க வேண்டும்..
1983 கறுப்பு யூலை 23 ..
சுமார் 33 வருடங்களுக்கு முன்னரும் நாம் (தமிழர்கள்) இப்படியான ஓர் பாரிய அவலத்திற்குள்ளானோம். பல்லாயிரக்கணக்கனவர்கள் கொல்லப்பட்டனர்,தமிழ் பெண்கள் சிதைக்கப்பட்டார்கள்,தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்,பல ஆயிரம் கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டது,லட்சக்கணக்காணவர்கள் இடம்பெயர்ந்தார்கள்
எமக்கு இன்று முள்ளிவாய்காலில் நடந்ததிற்கும் அன்று 1983 யூலையில் நடந்ததிற்கும் பாரிய வேறுபாடுகளை நாம் காணமுடியாது எனினும் தமிழர் தரப்பு அன்று 1983 யூலைக்கு பின்னர் தமது செயற்பாடுகளை எப்படி திட்டமிட்டார்கள் திட்டங்களை எப்படி செயற்படுத்தினார்கள்?
என்பதற்கு சான்றுகளாக 1987ம் ஆண்டிற்கு பின்னர் வந்த அனைத்து யூலைகளையும் நீங்கள் தேடிப்பார்தீர்களானால் உங்களுக்கு புரியும் இப்பொழுது மீண்டும் முள்ளிவாய்காலுக்கு வருவோம் !
அன்று 1983 யூலையில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை உலகிற்கு வெளிப்படுத்த இன்று போல் இருந்த எந்த வசதிகளும் அன்றைய காலகட்டத்pல் தமிழர்களிடம் இருக்கவில்லை அன்று தாயகத்தில் போக்குவரத்து, பொருளாதார தடையிருந்ததது, பயங்கரவாத சட்டம் அமுலில் இருந்ததது, நாளாந்தம் இறப்புக்களும், இழப்புக்களும் இருந்தது.
எனினும் தமிழர்கள் பல வழிகளில் தமக்கு வேண்டியதை பெற்றுக்கொண்டார்கள். அதற்கு உதவியாகவும் அனுசரனையாகவும் நிலத்திலும் புலத்திலும் மக்கள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
கலைஞர்களும்,
பொருளாதார அறிஞ்ஞர்களும்,
அறிவியல் மேதைகளும்,
அரசியல்வாதிகளும்,
சமூக சமய பிரமுகர்களும்,
மாணவ மாணவியர்களும்,
இளைஞர் யுவதிகளும்,
ஆச்சியும் அப்புவும்,
என அனைத்து தரப்பினரும் தமக்கு தெரிந்தவற்றை தாம் அறிந்தவற்றை தமக்கேயுரிய பாணியில் தமிழர்களுக்காக செயற்படுத்தினார்கள்.அதன் காரணமாகவே அன்று ஓர் பாரிய எழுச்சியும், வளர்ச்சியும் எற்பட்டு இளைஞர்களும் யுவதிகளும் புரட்சியை நோக்கி புறப்பட்டார்கள் புதிய வரலாறுகளை படைத்தார்கள். அன்று தமிழர்களுக்காக தம் வாழ்வை அர்பணித்து தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக,
தன்னுறவுகள்,
தன்ணுனர்வுகள்,
என அனைத்தையும்,
தமிழர்களுக்காக,
தாரைவாத்து கொடுத்துவிட்டு,
அன்று தமிழ்மானம் காக்க தலைநிமிர்ந்து புறப்பட்டவர்கள் இன்று தன்மானம் இழந்து தவிக்கின்றார்கள் அன்று போருக்கு தோள்கொடுத்தவர்கள் எல்லாம் இன்று இவர்களின் வாழ்விற்கு என்ன கொடுக்கின்றார்கள்.
இன்று தமிழர்களிடம் இருக்கும் பல வகையான திறமைகளும், வசதிகளும், குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில் உள்ள இரண்டாம் மற்றும் முன்றாம் தலைமுறையினரிடம் இருக்கும் அரசியல் அறிவியல் மற்றும் தொடர்புகளும், முதலாவது தலைமுறையிடம் இருக்கும் பொருளாதார வசதிகளையும் ஏன் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக முள்ளிவாய்கால் அவலத்துடன் வாழ்ந்து வருபவர்களை நோக்கிய செயற்பாடுகளை ஏன் இவர்கள் முன்னேடுக்க முயலவில்லை .. என்பது தான் மிகவும் வேதனையான விடயமாகும் ..
புலம் பெயர் தமிழர்கள் நாம் பல லட்சம் பேர் இருந்தும் சில ஆயிரம் போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற முயலாமல் முள்ளிவாய்கால் நினைவு நாளை மட்டும் கொண்டடினால் போதுமா புலத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு முறை 10 டொலர் உதவி செய்தால் நிலத்தில் வாடும் எம்மறவுகளின் வாழ்வு வாளமாகிடும் ..
நினைவு நாட்களை கெண்டாடிவிட்டு அடுத்த நினைவுநாள்வரை காத்திருக்காமல் எம்மால் இயன்றவற்றை எமக்காக தம்வாழ்வை தந்தவர்களுக்குதவிடுவோம் வாருங்கள்.
நன்றி
சி.பிரபாகரன்.
சுவிஸ்விசன்