மாவீரர் நாள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, March 14, 2019

மாவீரர் நாள்


பொழுதாகிபோனால்
ஊர் கொஞ்சம் தூங்கும்
செல் வந்து எங்களை
சில நேரம் சீராட்டி செல்லும்
தலைவன் இட்ட பெயரால்
தலை நிமிர்ந்து வாழு
நம்பிக்கையோடு
நடைபோடு தமிழா
நாளை என் மக்கள் சுதந்திரமாக வாழ!
கார்த்திகையில் தியாகிகளின்
உயிர் காற்று உலா வரும்
இருபத்தேலில் இவர்கள்
இரு இமையும் திறக்கும்.
மகத்தான மண்ணில்
புனித ஒலிஎழுப்ப
மாமனிதன் உலகுக்கு
உறுதி மொழி செப்ப
நாளைய நாயகர்கள்
சத்தியம் செய்ய
உறுதியுடன் ஈகை சுடர் ஏற்ற
உறவுகள் வந்து கண்ணீர் சொரியும்
களமுனையில்
காணமல் போனாலும்
காவியம் சொல்லும்
கரிகாலன் வாழும் மண்ணே !
கலங்காதே !
பீதியோடு எம்மினமே
வாழாதே!
விதியென்று வீணாகி போகாதே
மதியால் மக்களை வாழவைப்போம் …