கேகாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 20 ரூபாய் கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கிராம சேவகரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணிடம் 20 ரூபாயை கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அங்கிருந்து தப்பியோடிய கிராம சேவகர் தலைமறைவாகியுள்ளார்.
அவர் அந்த பகுதியின் ஓய்வுபெற்ற கிராம சேவகர் என குறிப்பிடப்படுகின்றது.
அவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணம் செய்து சென்றுள்ளனர். அவரும் அவரது மனைவியும் மாத்திரமே வீட்டில் வசதித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் விகாரைக்கு சென்று வந்த அவர் இவ்வாறு குறித்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது