பிரான்ஸில் பண்டைய கால பிரமாண்ட மம்மோத்: 548,000 யூரோக்களுக்கு ஏலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

பிரான்ஸில் பண்டைய கால பிரமாண்ட மம்மோத்: 548,000 யூரோக்களுக்கு ஏலம்


பண்டைய கால Woolly மம்மோத் எலும்புக்கூடு பிரான்ஸில் 548,000 யூரோக்களுக்கு ஏலம் மூலமாக விற்கப்பட்டுள்ளது.
ஆண் பாலினத்தை சேர்ந்த இந்த மம்மோத் கடந்த பத்து வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு இந்த விலங்கினத்தின் 80 சதவிகித உடல் முழுவதும் அசல் எலும்புகளால் ஆனதால் இதன் மதிப்பை விட பல மடங்கு அதிகமாக ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
Woolly மம்மோத் ரக விலங்கினம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெருமளவு அழிந்த நிலையில் அவற்றில் மிக அறிய வகைய சேர்ந்த இந்த மம்மோத் விலங்கினம் செபிரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகும்.
இதன் மூலம் உலக அளவில் அதிக விலைக்கு தனியார் நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ள மம்மோத் என்னும் பெருமையை தட்டிச்சென்றுள்ளது.
மேலும் விஞ்ஞானிகள் கூறுகையில் இந்த இனத்தின் அழிவிற்கு பருவநிலை மாற்றமும், மனிதர்கள் பெருமளவில் வேட்டையாடியதும் தான் காரணம் என தெரிவித்துள்ளனர்.