பூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட விண்கல்: என்ன நடக்கும்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, March 18, 2019

பூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட விண்கல்: என்ன நடக்கும்?

ஆபத்துக்கு சாத்தியமுள்ள 5 கி.மீ அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி அதி வேகத்தில் விரைந்து கொண்டிருப்பதாக சர்வதேச விண்வெளி ஆராச்சி மையமான நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
3200 Phaethon எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல்லால் குறிப்பிட்ட பகுதிகளில் எரிகல் பொழிவுக்கு சாத்தியம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1983 ஆம் ஆண்டு முதன் முறையாக 3200 Phaethon தொடர்பில் நாசா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.
5 கி.மீ அகலம் கொண்ட இந்த விண்கல்லானது பூமிக்கு நெருக்கமாக இருக்கும் 3-வது பெரிய விண்கல்லாகும்.
தற்போதைய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கற்களில் இதுவே மிக பெரியது எனவும், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் கூட்டத்தையே அழித்தொழிக்க காரணமான Chicxulub எரிகல்லுக்கு சரிபாதி அளவு கொண்டது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விண்கல்லானது அடுத்த சில மணி நேரத்தில் பூமியை நெருங்கும் எனவும் ஆனால் இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து தற்போது கணிக்க மூடியாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பூமிக்கு மிக நெருங்கிய புள்ளியில் குறித்த விண்கள் எட்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் பூமியை நெருங்கும் முன்னர் அடுத்த வட்ட பாதையில் புகுந்து செல்லவும் வாய்ப்பு உண்டு என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்