157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, March 30, 2019

157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாக உள்ளன.

விமானத்தின் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு விமானி மற்றொரு விமானியிடம் 'பிட்ச் அப், பிட்ச் அப்' என்று கூறுவது பதிவாகி உள்ளது.

விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

விமானம் புறப்பட்ட பிறகு அதை இயக்குவது மிகவும் சிரமாக இருக்கிறது. அதனால் மீண்டும் அபாபா விமான நிலையத்துக்கே திரும்ப அனுமதி கேட்டுள்ளார். நாங்களும் அனுமதி அளித்தோம். ஆனால், அதற்குள் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது என எத்தியோப்பியா நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் விபத்தில் இறந்துபோன பயணியின் உறவினர் விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். விமானத்தின் தானியங்கி செயல்பாட்டின் வடிமைப்பின் காரணமாகத்தான் இந்த விபத்து நடந்துள்ளது என புகார் அளித்துள்ளார்.

தற்போது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள் வெளியாகியுள்ளது.