முள்ளிவாய்க்காலில் 10 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுதலை புலிகளின் பொருள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, March 26, 2019

முள்ளிவாய்க்காலில் 10 வருடங்களுக்கு பிறகு கிடைத்த விடுதலை புலிகளின் பொருள்!
2003 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் , பெண்புலிகளின் விசேட படையணியினர் வெளியிட்டுவைத்த வெஞ்சமரின் வரிகள் என்னும் இறுவெட்டு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.

இறுதியுத்தம் நடைபெற்று 9 வருடங்கள் கடந்துள்ளபோதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர்த்தடயங்கள் உள்ளிட்ட ஆவணவெளீயீட்டுச் சிதறல்கள் தற்பொழுது வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் அழியாத சுவடுகளாக காணப்படுகின்றது.

இந்நத நிலையில் மாலதி படையணி 2013 ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் பெண்புலிகளினால் வெளியீட்டு வைக்கப்பட்ட வெஞ்சமரின் வரிகள் என்னும் இறுவெட்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இன்று மீட்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.