வீட்டில் செய்வினை கோளாறு பாதிப்பு உள்ளதை அறிந்து கொள்வது எப்படி? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, February 23, 2019

வீட்டில் செய்வினை கோளாறு பாதிப்பு உள்ளதை அறிந்து கொள்வது எப்படி?

துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல், யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

வீட்டில் உள்ள நிம்மதி காணாமல் போகும், கணவன் மனைவிக்குள் சதாகாலமும் சண்டை சச்சரவு ஏற்படும்.

வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும், பல விடயங்கள் நடக்கும்.

பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்.

பணம் சேமிப்பு ஆகாது, பண விரயம் ஏற்படும்.

எதிர்பாராத நோய்களையும், வாகன விபத்துக்களையும் ஏற்படுத்தும்.

தெய்வ வழிபாடு செய்ய முடியாது, கடவுள் நம்பிக்கை குறையும்.

அதிக கடன்கள் உண்டாகும்,

மனநிம்மதி இருக்காது, பசி, தூக்கம் இருக்காது, மனதில் எதிர்மறை சிந்தனை, எண்ணங்கள் தோன்றும்.

இதற்கு மாறாக இப்படியும் இருக்கும், அதாவது அசைவ உணவு சாப்பிட அதிக ஆர்வம், நீண்ட நேர தூக்கம், அதிக கோபம், அதிகமான காம உணர்வு எண்ணங்கள் இவைகளையும் ஏற்படுத்தும்.

எந்த தொழில், வேலை செய்தாலும் நஷ்டம், தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் செய்வினை கோளாறு பாதிப்பு உண்டு என உறுதிப்படுத்தலாம்.

ஆன்மீகம்