தமிழகத்தில் தன்னுடைய ஆடைகளை கிழித்து பொலிசார் அவமானப்படுத்தியதாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் கடைய நல்லூரை சேர்ந்தவர் தளவாய்சுந்தரம், ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது, இதை அறிந்த பெண் வீட்டார் பொலிசில் புகார் அளித்தனர்.
அதே தினத்தன்று பெண் வீட்டாரின் உறவினர் ஒருவர் இரண்டு பொலிசாருடன் அரிவாளை காட்டி மிரட்டி, தளவாய்சுந்தரத்தை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர்.
இதன்பின்னர் ஆட்டோ ஸ்டாண்டில் வைத்து அவரை கடுமையாக தாக்கியதுடன் மேலாடையை கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
நள்ளிரவில் வீடு திரும்பிய தளவாய்சுந்தரத்தால் அவமானத்தை தாங்க முடியவில்லை, இதனால் நடந்த சம்பவம் குறித்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் தெரிவித்து விட்டு அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவரமறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.