ஆப்பிள் நிறுவனமானது தனது தயாரிப்பான ஐபோன்களின் பேட்டரிகளை சலுகை விலையில் மாற்றிக்கொள்ளும் சேவையினை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
இச் சலுகையானது இம் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
பழுதடைந்த மின்கலங்களை இவ்வாறு 3,900 இந்திய ரூபாய்கள் என்ற பெறுமதியில் மாற்றிக்கொள்ள முடியும்.
5,900 இந்திய ரூபாய்கள் பெறுமதி உடைய குறித்த மின்கலங்கள் 2,000 ரூபா வரை விலை குறைக்கப்பட்ட நிலையிலேயே 3,900 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது.
எனினும் iPhone 6, iPhone 6 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone SE, iPhone 7, iPhone 7 Plus, iPhone 8, iPhone 8 Plus மற்றும் iPhone X போன்ற கைப்பேசிகளின் மின்கலங்களை மாத்திரமே சலுகை விலையில் மாற்றிக்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகள் இச் சலுகைக்குள் உள்ளடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.