தனது காதலனாலேயே ஒன்பது ஆண்டுகளாக தூக்கத்தில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் கண்ணில், தற்செயலாக அவள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சிகள் சிக்கியுள்ளது.
நம்பி வந்த காதலியை அவளுக்கு தெரியாமல் வன்புணர்வுக்குள்ளாக்கியதோடு, அதை வீடியோவும் எடுத்து ரசித்த Jack Morrison (23) என்னும் அந்த நபருக்கு நீதிபதி ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த இளம்பெண் ஒரு நாள் தனது கணினியில் தனது ஹார்டு டிரைவுக்கு பதிலாக தவறுதலாக வேறொன்றைப் பொருத்தி பார்க்கும்போது அதில் தான் தனது காதலனால் தூக்கத்தில் வன்புணர்வுக்குள்ளாக்கப்படும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறாள்.
அவள் பத்து மாதங்களில் எட்டு முறை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.
Jack மீது 18 வன்புணர்வு குற்றச்சாட்டுகளையும் மூன்று அநகரீகமான தாக்குதல்களையும் பதிவு செய்த நீதிபதி, தனது மனதில் ஏற்பட்டுள்ள காயங்களுடனேயே அந்த பெண் நீண்ட காலம் வழ வேண்டியிருக்கும் என்றார்.
மூர்க்கமான மனிதர்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதை அறிந்துள்ளதால், பெண்கள் எப்போதுமே அவர்களிடமிருந்து விலகியே இருப்பார்கள், ஆனால் இந்த பெண்ணின் விடயத்தில், தூக்கமே அவளுக்கு எதிரியானதோடு, அவள் நம்பிக் காதலித்த ஆணே அவளுக்கு எதிரியாகியிருக்கிறான் என்றார்.
அத்துடன் குற்றவாளியான Jackஇடம் அவர், உன்னுடைய சந்தோஷத்திற்காக அந்த பெண்ணை ஒரு பாலியல் பொம்மையைப் போல் நீ பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய் என்றார்.
விசாரணையில் Jack இணையத்தில் தூக்கத்தில் உறவு கொள்வது தொடர்பான காட்சிகளை விரும்பி பார்த்துள்ளது தெரியவந்தது.
ஒரு வேளை அவளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு அவள் கெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வழக்கறிஞர்களின் கருத்தை நிராகரித்த நீதிபதி, அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிவிட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள Jack, 2015ஆம் திகதி வரை ஜாமீனில் வர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.