எம்மைப் பற்றி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

எம்மைப் பற்றி

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு எமது வணக்கங்கள்!

உலகையே உள்ளங்கையில் அடக்கிவிட்ட இணைய தொழில்நுட்பத்தில் ஊடக சேவையும் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், உளகளாவிய ரீதியில் விரிவாக்கப்பட்டுமுள்ளது. இவ்விரிவாக்கமானது உலகின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ஒரு சில மணி நேரத்தினுள் உலகறியச் செய்கின்றது.

இந்த இணைய சாம்பிராட்சியத்தில் கதிரவன் இணையத்தளமும் இலங்கை செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டு செய்திகள் மற்றும் தொழில்நுட்ப செய்திகள் உட்பட சினிமா, கிசுகிசு, வினோதம், பலதும் பத்தும், மருத்துவம், ஜோதிடம், கதிரவன் களஞ்சியம் என்பவற்றில் தினமும் புதிய விடயங்களைத் தாங்கி வருகின்றது.

இவற்றுடன் கதிரவன் தொலைக்காட்சி, கதிரவன் புகைப்படம், கதிரவன் காதல், கதிரவன் ஆன்மீகம், சிறுவர் பூங்கா, பல்சுவைக் கதம்பம் போன்ற தளங்களையும் தன்கத்தே கொண்டு தமிழ் பேசும் மக்களின் செய்தி, அறிவியல் மற்றும் பல்சுவை அவாவிற்கு தீனிபோடக் காத்திருக்கின்றது.

அத்துடன் வெள்ளிடை மலையாக பல்வேறு திறமைகளை கொண்டிருந்தும் அவற்றை வெளிக்கொணர முடியாது தவிக்கும் அத்தனை அறிவுள்ளங்களுக்கும் கதிரவனில் இடமளித்து ஆக்கங்கள் வெளிவர வழிசமைத்து அவர்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் அறிவொளி பரப்புவதும் கதிரவனின் எண்ணங்களுள் ஒன்றாகும்.

கடந்த காலங்களில் கதிரவன் பட்டொளி வீசுவதற்கு அதன் வாசகர்களும், ஆர்வலர்களும் ஆற்றிய பங்களிப்பு சொல்லில் அடக்கிவிட முடியாதது. இருந்தும் நன்றி நவில்வது தமிழன் பண்பு என்பதற்கிணங்க அனைத்து அன்புள்ளங்களுக்கும் கதிரவன்  குழுவம் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் புதுப்பொலிவுடன் வீறுநடை போடும் கதிரவனின் மிளிர்ச்சிக்காக உங்களது அளவற்ற ஆதரவையும், சிறு உதவியையும் ஆற்றுவீர்களாக!

நன்றி வணக்கம்

கதிரவன்  குழுமம்