வடிவேலுவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி உத்தரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 30, 2021

வடிவேலுவுக்கு நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி உத்தரவு!


.

நிலப்பிரச்சினை தொடர்பாக நடிகர் சிங்கமுத்து உள்ளிட்டோர் மீது நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் எழும்பூர் கோர்ட்டில் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குறுக்கு விசாரணையில், நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக, நடிகர் சிங்கமுத்து, நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் வடிவேலு குறுக்கு விசாரணைக்காக டிசம்பர் மாதம் 7-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.