யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழவில் சுவாமி காவிய இருவருக்கு கொரோனா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, August 1, 2021

யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழவில் சுவாமி காவிய இருவருக்கு கொரோனா!

யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழவில் சுவாமி காவிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.


ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


இந்நிலையில் மகோற்சவ தின திருவிழாவில் சுவாமி காவிய பக்தர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக

சுகாதாரத் தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு


சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக மேல் நடவடிக்கையினை பிரதேச சுகாதாரத் தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, மாவிட்புரம் கந்தசுவாமி கோவில் திருவிழா வழமை போன்று நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது