யாழில் கசிப்பு காச்சும் இடத்தை காட்டி குடுத்த இளைஞன் மீது பெண்கள் தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, July 12, 2021

யாழில் கசிப்பு காச்சும் இடத்தை காட்டி குடுத்த இளைஞன் மீது பெண்கள் தாக்குதல்!

 யாழ்.சுழிபுரம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகையிட சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சுழிபரம் – வறுத்தோலை பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


அதனடிப்படையில் அடையாளம் காணப்பட்ட வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது வீட்டிலிருந்து வெளியேவந்த பெண்கள் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


இதன்போது அயல் வீட்டு இளைஞன் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அந்த இளைஞனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸார் முன்னிலையில் இளைஞன் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இதன்போது வீட்டுக்குள்ளிருந்து வந்த ஆண் ஒருவரும் இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.


இதனையடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார் வீட்டிலிருந்த பெண்கள் உட்பட சகலரையும் கைது செய்துள்ளதுடன், சுமார் 40 லீற்றர் கசிப்பையும் மீட்டிருக்கின்றனர்.