திடீரென யாழில் அதிகரித்த கொரோனா தோற்றாளர்கள்....! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 15, 2021

திடீரென யாழில் அதிகரித்த கொரோனா தோற்றாளர்கள்....!

 


யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் இரு நாட்களில் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.இந்த நிலையில், குறித்த பகுதி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம், சுகாதார பிரிவு மற்றும் படையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியை முடக்குவதற்கு சுகாதாரத் தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் படைத்தரப்பினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் குறித்த பகுதி கொண்டுவரப்பட்டிருக்கின்றது.