யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த அவலம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 4, 2021

யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த அவலம்!

  யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று மூன்றரை வருடங்களிற்கு மேலாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.


இந்நிலையில் மணமக்கள் வாழ்க்கையில் அடிக்கடி பெண்ணின் தாயார் அடிக்கடி சச்சரவை உண்டுபண்ணியுள்ளார். உனக்கு இவன் பொருத்தமில்லை, டிவோஸ் எடு என மகளை உசுப்பேற்றி வந்துள்ள மாமியாரிற்கு சுவிஸ் நாட்டு மோகம் தலைக்கேறி அதற்கான அடித்தளத்தையும் போட்டு வந்துள்ளார்.


இதனையடுத்து  கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் வீட்டில் இருந்து தலைமறைவான குறித்த பெண் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.


இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்ய சென்றால் உரிய பதில் கிடைக்கவும் இல்லை. இதெவேளை பெண்ணின் உறவுகளிடம் பெண் காணாமல் போனமை தொடர்பில் எதுவித பதட்டமும் இல்லை எனவும் சொல்லப்படுகின்றது.


பிரிந்து சென்ற மனைவி இதற்காகத்தான் பிரிந்து சென்றார் என தெரியாது புலம்பி திரியும் கணவனின் நிலை பெண்ணிற்கு தெரிந்திருந்தாலும், தாயின் தூண்டுதலிலேயே பெண் தலைமறைவாகி இருப்பதாக ஊரவர்கள் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.


இதேவேளை  நமது கலாச்சாரம் மறந்து பணத்தாசை, ஆடம்பரம், வெளிநாட்டு மோகத்தால் சிக்கி சீரழிந்து போவது இன்று சாதாரண விடயமாகி போயுள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.