முல்லைத்தீவில் கோவிலில் தீ மிதித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, April 27, 2021

முல்லைத்தீவில் கோவிலில் தீ மிதித்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட உடையார்க்கட்டில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் தீ மிதித்த இருவர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.குரவில் பகுதியைச் சேர்ந்த 31, 38 வயதுகளையுடய ஆண்கள் இருவரே இவ்வாறு எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். குரவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில், நேற்று (26), சித்திரா பௌர்ணமி விழா நடைபெற்றது.


அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது. இதன் போது, குறித்த இருவரும் தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவுசெய்து கொண்டிருந்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளானர்.


இவ்வாறு எரிகாயங்களுக்குள்ளான இருவரும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.