யாழ் ஊர்காவற்துறையில் மதுபானசாலை அமைக்ககூடாதென குரல் கொடுத்த நபர் மீது தாக்குதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 10, 2021

யாழ் ஊர்காவற்துறையில் மதுபானசாலை அமைக்ககூடாதென குரல் கொடுத்த நபர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் மாத்திரமல்ல தீவுப்பகுதியில் எங்கேனும் மதுபானசாலை அமைக்ககூடாதென குரல் கொடுத்த இரு பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் மோகன்ராஜ் ( வயது 36 ) மீதே நேற்று இரவு ஒட்டுக்குழுவினர் கரம்பன் காட்டுப்பகுதியில் வைத்து தாக்குதலை நடாத்தியுள்ளனர் .


இதன்போது அவரின் கூக்குரல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஒன்றுகூடிய நிலையில் குடும்பஸ்தரை தாக்கிய நபர்கள் முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.