புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்; இலங்கை சுங்கம் விடுத்த அறிவிப்பு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 18, 2021

புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்; இலங்கை சுங்கம் விடுத்த அறிவிப்பு

 புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த ஏனைய இரு நிறுவனங்களுக்கும் அவற்றை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சுங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்களில், ஒரு நிறுவனம் மாத்திரமே மீள் ஏற்றுமதி செய்துள்ளது.


இதேவேளை அலி பிரதர்ஸ், எதிரிசிங்க எடிபிள் ஒயில் மற்றும் கட்டான சுத்திகரிப்பு நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட அஃப்லாடாக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெயின் அளவு சுமார் 1850 மெட்ரிக் தொன்கள் என தெரிவிக்கப்படுகிறது.


அவற்றில், கட்டான சுத்திகரிப்பு நிலையம் இறக்குமதி செய்த 105 மெட்ரிக் தொன்கள் தேங்காய் எண்ணெயும் மலேசியாவிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சுங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.