யாழ்.மாநகரத்தை அழகுபடுத்த முயற்சித்தமை பயங்கரவாதம் என்றால் அந்த பயங்கரவாதத்தை நான் மக்களுக்காக தொடர்ந்தும் செய்வேன் என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதல்வர் என்ற வகையில் யாழ்.மாநகரத்தின் செயற்பாடுகளை உரிய முறையில் செய்வது எனது கடமையாகும்.
ஆனால் யாழ்ப்பாணப் பொலிஸார் யாழ்.நகரத்தை அழகு படுத்துவதுவதை தடுப்பதற்காக என்னை கைது செய்தும் அதிகாரிகளின் விடயங்களிலும் தேவையற்ற தலையீடுகளை செய்தார்கள்.