யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வெளியாகிய நிலையில் இன்று காலை குறித்த குழந்தை பொலிஸாரால் மீட்கப்பட்ட அதேவேளை, தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் யாழ்.மாவட்டத்தின் அரச அதிகாரிகள் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கை வெளிப்படுத்தியமை அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
கடந்த இரவு குறித்த குழந்தை தாக்கப்படுவது குறித்த காணொளி ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது.
இருந்தபோதிலும் அதனை பல ஊடகங்கள் பொதுவெளியில் பகிராமல் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவதற்கான முயற்சியினை மேற்கொண்டிருந்தனர்.
அதன் அடிப்படையில், உடனடியாகவே யாழ்ப்பாணத்தின் உயர் செயலகங்களின் உயர் அதிகாரிகள் மூவருக்கு குறித்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களால் தகவல் வழங்கப்பட்டதுடன், குழந்தை தொடர்பிலான காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளமையால் அதனை அறியும் அந்தத் தாயாரால் குழந்தைக்கு உயிருக்கு ஆபத்துக்கூட ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
“ஓம் பார்க்கிறோம்” என்கிற பதிலைத் தவிர அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இன்று காலை 8 மணிவரையில் குறித்த குழந்தையைக் காப்பதற்கான அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை மிகுந்த வேதனையைத் தோற்றுவித்துள்ளது.
இருப்பினும்,
பொலிஸார் காலையில் குழந்யைக் காப்பாற்றியிருப்பதை இட்டு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இவள் தனக்கு மனநோய் என பொய் சொல்கின்றார்.