இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்ய புது வசதியினை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது.இதுவரை இன்ஸ்டாகிராமில் நேரலை ஸ்டிரீமிங்கில் ஒருவர் மட்டுமே இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றிணைந்து நேரலை ஸ்டிரீமிங் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இப்புதிய வசதியை இன்ஸ்டாகிராம் லைவ் ரூம்ஸ் என அழைக்கிறது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தனது வலைதளத்தில் "நேரலையில் இதுபோன்ற அம்சம் புது வாய்ப்புகளை உருவாக்க வழி செய்யும், இதை கொண்டு விவாத நிகழ்ச்சி, மற்ற கலைஞர்களுடன் உரையாடல், பேட்டி அல்லது நண்பர்களுடன் இணைந்து உரையாட முடியும்." என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.