அமெரிக்காவை தளமாகக் கொண்ட விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய் கிரகம் தொடர்பில் மும்முரமாக ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது.அண்மையிலும் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பப்பட்டு விண்வெளி ஓடம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியிருந்து.
இது பல கோணங்களில் படங்களை எடுத்து அனுப்பியிருந்தது.நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. இது மக்களுக்கு செவ்வாய் கிரகம் தொடர்பில் புதிய அனுபவத்தினை வழங்கியிருந்தது.இந்நிலையில் மக்கள் செவ்வாய் கிரகத்தில் தாம் இருப்பது போன்ற புகைப்படத்தினை தாமே உருவாக்குவதற்கான வசதி ஒன்றினை நாசா அறிமுகம் செய்துள்ளது.
இது Photo Booth என அழைக்கப்படுகின்றது.
https://mars.nasa.gov/mars2020/participate/photo-booth/ எனும் இணைய முகவரிக்கு சென்று தமது புகைப்படத்தினை அப்லோட் செய்வதன் ஊடாக செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.