மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற ஒருவர், மோட்டார் சைக்கிளை செலுத்தியபடி எழுந்து நின்று ரிக்ரொக் வீடியோ பதிவு செய்துள்ளார்.
அவர் உடையார் கட்டிலிருந்து, புதுக்குடியிருப்பு நகர் வரை பல இடங்களில் இந்த வித்தை காண்பித்தபடி சென்றுள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிள் அருகிலுள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் படுகாயமடைந்தவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.