ஒன்பிளஸின் புது 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் “ஒன்பிளஸ் 9ஆர்” எனும் பெயரில் அறிமுகமாகும் என இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பெயர் கொண்ட குறியீட்டு விவரங்கள் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.
எனினும், குறியீட்டு விவரங்கள் எங்கிருந்து வெளியானது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை குறிப்பிடப்படவில்லை.
மேலும் இந்த குறைந்த விலை ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 திபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என டூயல் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.