யாழ்.பல்கலைகழகத்தில் பீ.சி.ஆர் இயந்திரத்தை கையளித்தார் அமெரிக்க துாதுவர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, February 23, 2021

யாழ்.பல்கலைகழகத்தில் பீ.சி.ஆர் இயந்திரத்தை கையளித்தார் அமெரிக்க துாதுவர்

 இலங்கைக்கான அமெரிக்க துாதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் யாழ்.பல்பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீ.சி.ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.



பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது.


குறித்த பி. சி. ஆர் இயந்திரம் யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது.


யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவிடம் பி. சி. ஆர் இயந்திரத்தைக் கையளித்தார்.


நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதிஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஶ்ரீபவானந்தராஜா, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


இதேவேளை தற்போதைய கொரோனாப் பெரும் தொற்று நிலமைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய குறைந்தளவானவர்களுடனேயே நிகழ்வு இடம்பெற்றது.