பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் திருகோணமலையில் தாக்குதல் முயற்சி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, February 5, 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் திருகோணமலையில் தாக்குதல் முயற்சி!

 தமிழர்களுக்கு நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது திருகோணமலைப்பகுதியில் வைத்து சிலர் தாக்குத்தல் மேற்கொண்டுள்ளனர்.


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.


இதன்போதே திருகோணமலை – மடத்தடிச் சந்திப்பகுதியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.பேரணியில் பொலிஸார் கலந்துகொண்டிருந்தபோதும் தாக்குத்தல் நடத்தப்பட்டுள்ளதுடன், இத் தாக்குதலில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.