கொரோனா தொற்றிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த அம்பலாங்கொட நகரசபை உறுப்பினர் தனசேன மதுவகே இன்று (15) காலமானார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை சுதந்திரக்கட்சி உறுப்பினரான அவர், கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது உள்ளூராட்சிசபை உறுப்பினராவார்.