யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த இன்னொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி மக்கள் வங்கிக்கு அருகாமையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வவுனியாவை சேர்ந்த கண்ணன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
வீதி திருத்த பணியில் ஈடுபடும் கனரக வாகனமொன்றும், பிக்அக் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து சென்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.