கொரோனா அபாயம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த சந்தைகளை மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்துள்ளது.
சந்தைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று காலை மாகாண சுகாதார பணிப்பாளர் தலமையில் நடைபெற்றபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் மாகாணத்தில் உள்ள சகல சந்தைகளையும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் திருமண மண்டபங்களை திறக்கவும், 150 பேருடன் திருமணங்களை நடத்தவும் அனுமதி வழங்கப்படுவதென இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.